Skip to content

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்…ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000! எடப்பாடி பழனிசாமியின் அதிரடி தேர்தல் வாக்குறுதி!


சென்னை,பிப்.24; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 3ஆம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

  1. தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

2. பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

3. பிளஸ் டூ வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

4. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்கப்படும்.

5. மீன்பிடி தடை காலங்களில் வழங்கும் நிவாரணம் ரூ.8,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்.

6. கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.

7. விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.

8. நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

9. தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

பரபரப்பாக பேசப்படும் அதிமுகவின் 3ஆம் கட்ட வாக்குறுதிகள்!

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் அதிமுக வெளியிட்டுள்ள இந்த 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “வருவாயைப் பெருக்கி, சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *