Skip to content

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு ‘கிரீன் சிக்னல்’?.. ஓபிஎஸ்-க்கு கதவு மூடல்? எடப்பாடி பழனிசாமியின் அதிரடி மூவ்!

சென்னை,ஜன.08; தமிழ்நாடு அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி (EPS) வெளியிட்டுள்ள சில முக்கிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு: டெல்லியில் நடந்தது என்ன?

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, அவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால், நேற்றிரவு (08.01.2026) டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

டிடிவி தினகரனுக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு ‘நோ’

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக முக்கியமானது.

lதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப்போகும்வேறு கட்சிகள் எவை?

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சில புதிய கட்சிகள் இணையும், அதை இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவர் டிடிவி தினகரன் குறித்து நேரடியாக மறுப்பு தெரிவிக்காதது, அமமுக-வை அதிமுக கூட்டணியில் இணைக்க அவர் சம்மதித்துவிட்டதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இறங்கி வருகிறாரா டிடிவி தினகரன்?

சில தினங்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “தேர்தல் நேரத்தில் துரோகி, எதிரி என்பதையெல்லாம் பார்க்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஈபிஎஸ்-ஸை ‘துரோகி’ என்று விமர்சித்து வந்த டிடிவி தினகரன், இப்போது கூட்டணியை முன்னிறுத்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராகி வருகிறார்.

அதிமுக – பாஜக – பாமக கூட்டணி உறுதி

தற்போதைய நிலவரப்படி அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பதாகக் கூறப்படும் நிலையில், சிறிய கட்சிகளை உள்ளே இழுப்பதன் மூலம் கூட்டணியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

டிடிவியை சேர்த்துக்கொண்டால் தென்மாவட்டத்தில் வாக்குகள் கிடைக்கும்?

ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர்த்து, டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தென் மாவட்ட வாக்குகளைக் கவர எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். ஆனால், இந்த ‘மெகா கூட்டணி’ திமுகவின் பலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *