Skip to content

உட்கட்சிப் பூசலில் உழலும் தவெக; என். ஆனந்தை ஓரங்கட்டும் ஜான்-ஆதவ் அர்ஜூனா! சவாலான தொகுதி ஒதுக்கப்பட்டதால் விரக்தி

சென்னை,மார்ச்.17; கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் உட்கட்சி அரசியலில் உழன்று கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

தவெக உருவாக என். ஆனந்த் அஸ்திவாரமாக இருந்ததால், அவருக்கு மிக முக்கியமான பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தார் விஜய்.

ஆனந்துக்கு எதிராக திட்டமிட்டு காய் நகர்த்தும் ஜான்-ஆதவ்

ஆனால், சமீப​​கால​​மாக தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்​​கிய​​சாமி, தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்​​ஜுனா ஆகிய இருவரும் இணைந்து ஆனந்​​துக்கு எதி​ராகத் திட்​ட​மிட்டே காய்​​நகர்​த்தி அவரை ஓரங்கட்டி வரு​கி​ன்றனர்.

இதனால் செய்வதறியாது நிலை குலைந்து போயுள்ளது ஆனந்த் தரப்பு. இதன் உச்சக்கட்டமாக, சோழிங்கநல்லூரில் போட்டியிட விரும்பிய ஆனந்தை வலுக்கட்டாயமாக தியாகராய நகருக்கு தள்ளிவிடும் அளவுக்கு விஜய்யிடம் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டது ஜான் -ஆதவ் கூட்டணி என தவெக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.

ஆனந்த் ஆளுமையற்றவர் என விஜய்யின் காதுகளில் ஓதுகின்றனர்

என். ஆனந்​​துக்​​குக் கட்​​சி​யின் அரசி​யல் வியூ​கங்​​களைப் புரிந்து கொள்​ளத் தெரிய​வில்​​லை; மேடைகளில் பேசுவதற்​​கும் அவருக்​​குப் போதிய ஆளுமை இல்​​லை. அவருக்​​குத் தொடர்​ந்து முக்​​கி​யத்​​து​வம் கொடுத்​​​தால் அது கட்​​சி​யின் ஒட்​​டுமொத்த தோல்​விக்கே வழி​வகுக்​​கும் என ஜான்-ஆதவ் ஜோடி விஜய்​​யின் காதுகளில் தொடர்ந்து ஊதி வருகின்றனர்.

இதனால் தான் சமீப​​கால​​மாக தவெக நிகழ்​ச்​​சிகளில் ஆனந்​​துக்​​​கான முக்​​கி​யத்து​வம் குறைக்​​கப்​​பட்டு வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதற்​​கிடை​யில், ஆனந்த் தயா​ரித்த வேட்​​​பாளர் பட்​​டியலையும் ஜான்-ஆதவ் தரப்பு நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

விரும்பியது சோழிங்கநல்லூர், கிடைத்தது தியாகராய நகர்!

‘பாஜக-வுடன் கூட்​​டணி வைக்க ஆனந்த் விரும்​​பு​கி​றார்’ என்​​கிற தகவலை​யும் பரப்பி வரு​வ​​தாக அவரது தரப்பு கூறி வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​​யாகவே, சோழிங்​​கநல்​​லூரில் போட்​​டி​யிட விரும்​​பிய ஆனந்தை தியாகராய நகர் தொகு​தி​யில் முடக்​​கி​விட்​​​டார்​​கள் எனப் பேசப்படுகிறது.

தொடக்கத்​​தில் ஆனந்த் எடுத்த ரகசிய சர்​​வே​யில், சோழிங்​​கநல்​​லூர் தொகு​தி​யில் போட்​​டி​யிட்​​​டால் மட்​​டுமே வெற்றி நிச்​​ச​யம் என தகவல் வந்​​திருந்​​தது. தமி​ழ்நாட்டிலேயே அதிக வாக்​​​காளர்​​களைக் கொண்ட தொகுதி என்​​ப​​தா​லும், ஐடி (IT) ஊழியர்​​கள் அதி​கம் நிறைந்த பகுதி என்​​ப​​தா​லும், அங்கு உறுப்​​பினர் சேர்​க்கை மற்​​றும் கிளை அமைப்​​பு​கள் வலு​வாக இருப்​​ப​​தா​லும் அந்​​தத் தொகு​தி​யையே ஆனந்த் மலை​போல நம்​​பி​யிருந்​​​தார்.

சோழிங்கநல்லூரில் வெற்றி வாய்ப்பு என கணக்குப்போட்ட ஆனந்த்!

மேலும், அங்கு இரண்டு முறை தொடர்​ந்து வெற்றி பெற்ற திமுக எம்​​.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது தொகு​திக்​​குள் நில​வும் அதிருப்​​தி​யும், அதி​முக-​வில் கே.பி.கந்​​தனுக்​​குப் பெரிய அளவில் வரவேற்பு இல்​​லாததும் தனக்​​குச் சாதக​​மாக அமை​யும் என ஆனந்த் கணக்​​குப் போட்​​டிருந்​​​தார். ஆனால், ‘அங்கே சென்னை புறநகர் மாவட்​​டச் செய​லா​ளர் சரவணனை நிறுத்​​தி​னால்​​​தான் சரி​​யாக இருக்​​கும்; அவருக்​​குத்​​​தான் மக்​​கள் ஆதரவு இருக்​​கிறது’ என ஆதவ் – ஜான் தரப்பு விஜய்​​யிடம் சொல்​​லி​யிருக்​​கிறது.

அம்பத்தூர் தொகுதியை குறிவைத்தார்; அதுவும் இல்லை என்றாகிவிட்டது..?

இதையடுத்​​து, அம்​​பத்​​தூர் தொகு​தி​யைக் குறி​வைத்து ஆனந்த் வேலை செய்​​​தார். அங்கு அதிகமாக வசிக்கும் பட்டியலின மற்றும் கிறிஸ்தவ மக்கள் தவெக-வுக்கு வாக்களிப்பார்கள்; அதன் மூலம் எளி​தில் வென்​​று​விடலாம் என நம்​​பி​னார். ஆனால், அங்​​கே​யும் ‘ஜே.சி.டி பிர​​பாகருக்கு வாய்​ப்பு கொடுத்​​​தால்​​​தான் சரி​​யாக இருக்​​கும்’ எனச் சொல்லி ஆனந்​​துக்கு செக் வைத்​​தது ஆதவ்-ஜான் தரப்​​பு.

திமுக பலமிழந்த தொகுதி எனக்கூறி தியாகராய நகருக்கு தள்ளிவிட்டனர்!

இறு​தி​யில், ‘சென்​​னை​யில் திமுக பலமி​ழந்து இருக்​​கும் தொகு​தி​களில் தியாகராய நகரும் ஒன்​​று; அங்கு ஆனந்தை நிறுத்​​தி​னால் வெற்றி நிச்​​ச​யம் என எங்​​கள் சர்வே சொல்​​கிறது’ எனப் புதுக் கதையைச் சொல்லி ஆனந்தை தியாகராய நகருக்​​குத் தள்​​ளி​விட்​​டனர்.

ஆனால், தியாகராயநகர் தொகு​தி​யில் வெற்றி பெறு​வது அவ்​​வளவு எளிதல்ல என்​​பது இப்​​போது​​தான் ஆனந்​​துக்​​குத் தெரிய​வந்​​திருக்​​கிறது. அங்கே திமுக சார்​​பில் தற்போதைய எம்​​.எல்.ஏ கருணாநி​தி, உதயநிதி ஆதர​வாளர் ராஜ அன்​​பழ​கன் ஆகி​யோர் சீட் பெற தீவிர​​மாக முயன்று வரு​கி​ன்றனர். கடந்த முறை நூலிழை​யில் வெற்​​றி வாய்ப்பை நழுவவிட்ட அதி​முக-​வின் தியாகராயநகர் சத்யநாராயணன் கடும் சவாலாக இருப்​​​பார்.

தியாகராய நகரில் களம்காண முட்டி மோதும் பல பிரபலங்கள்

மேலும், பாஜகவிற்கு செல்​​வாக்​​குள்ள தொகுதி என கருதப்படுவதால் தமி​ழிசை, எஸ்​​.ஜி.சூர்​​​யா, வினோஜ் பி செல்​​வம் எனப் பலர் களமிறங்​​கக் காத்​​திருக்​​கி​ன்றனர். இதனால் வெற்​​றி​பெறு​வது கடினம் என ஆனந்த் விரக்​​தி​யில் இருக்​​கி​றார். விஜய்​​யைச் சந்​​தித்​​துப் பேசி​யும் பலன் கிடைக்​​​காத​​தால் அவர் ஆழ்​ந்த வருத்​​தத்​​தில் இருப்பதாகப் பேசப்படுகிறது.

ஆனால், ஆனந்த் தரப்பு வட்டாரங்கள் வேறுவிதமான தகவலைக் கூறுகின்றனர். என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே பிரச்னை இருப்பதாக சிலர் திட்டமிட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக அவர்கள் கூறினர்.

தியாகராய நகரில் களம் காண்பதே ஆனந்தின் விருப்பம்: ஆதரவாளர்கள்

உண்​​மை​யில், தியாகராயநகர் தொகு​தி​யில் போட்​​டி​யிட வேண்​​டும் என்​​பது​​தான் ஆனந்​​தின் தனிப்​​பட்ட விருப்​​ப​​மாக இருந்​​தது. இதனை தலைமையிடம் அவர் முறைப்படி தெரிவித்தார். விஜய்யும் அதற்குப் பச்சைக்கொடி காட்டியதால், தற்போது அங்கு அவர் தீவிரமாகக் களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்குள் எந்தவிதமான கோஷ்டிப் பூசலும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது, விவரமறிந்த வட்டாரம்.

ஆனால், அரங்கேறும் காட்சிகளைப் பார்க்கும்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனந்த் தரப்பு ஓரங்கட்டப்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *