Skip to content

“கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்பதைப் போன்றதா, விஜய்யின் அரசியல் வருகை? ‘பொலிடிக்கல் பாம்’ வெடிக்க வாய்ப்பே இல்லையா?

சென்னை,மார்ச்.06; தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார். “கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்பது போல, தவெகவின் கூட்டணிக் கதவை திறந்து வைத்திருந்தபோதிலும் இதுவரை யாரும் வந்து தட்டவில்லை. எனவே, விஜய் வீசியதாக கூறப்படும் “அரசியல் வெடிகுண்டு” (Political Bomb) நமத்துப் போய்விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

பிசுபிசுத்துப்போன கொள்கை எதிரி, அரசியல் எதிரி பிரகடனம்!!

தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்த 2024ஆம் ஆண்டு (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் பிரகடனம் செய்தார். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று மக்களுக்கும் புரியவில்லை, விஜய்யாலும் தெளிவுபடுத்த முடியவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் வெடிகுண்டு!

அப்போது “தவெகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்” என்றும் அறிவித்தார். அச்சமயம் தமிழ்நாடு அரசியலில் இது ஒரு புதிய முன்னெடுப்பு என பரவலாகப் பேசப்பட்டது. தவெக-வினர் அதை ‘பொலிட்​டிக்​கல் பாம்’, அதாவது ‘அரசியல் வெடிகுண்டு’ என்று கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு அரசியலைப் பொருத்தமட்டில், பொதுவாக பெரிய கட்சிகள் கூட்டணியை ஏற்றுக்கொண்டாலும், ஆட்சியில் பங்குதர முன்வருவது கிடையாது.

கடைசியில் ‘பொலிடிக்கல் பாம்’ வெடிக்கவே இல்லையே?

அப்போது விஜய் வீசிய அந்த அரசியல் ‘வெடிகுண்டு’ பயங்கரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது நமத்துப் போய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“தி​முக மற்​றும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகளைத் தன் பக்​கம் இழுக்கவே விஜய் இப்படி ஒரு மிகப்பெரிய திட்டத்தையே கையிலெடுத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன் ஒரு பகு​தி​யாகத்தான், ஆட்சி அதி​காரத்​தில் பங்கு என்றும் கூறினார்.

விஜய்-க்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது புதிர்!

அதி​காரப் பகிர்வு என்னும் தூண்டிலைப் போட்டு கட்சிகளை தன் பக்​கம் இழுக்​கலாம் என அவர் கணக்கு போட்​டிருந்​தார். ஆனால், ஒரு தேர்​தலில் கூட களம் கண்டிராத விஜய்​யின் வாக்கு வங்கி எந்​தள​விற்கு இருக்​கும் என்​பது புதி​ராகவே இருப்​ப​தால், எந்​தக் கட்​சி​யும் பனையூர் பக்​கம் எட்​டிக் கூடப் பார்க்​க​வில்​லை.

ஆரம்​பத்​தில் இருந்தே காங்​கிரஸ் கட்சி கூட்​ட​ணிக்கு வரும் என தவெக பெரிதும் நம்​பியது. துணை முதலமைச்சர் பதவி, 70 சீட் என்றெல்லாம் வலைவீசினர் பனையூர் வாசிகள்.

பேசுபொருளான பிரவீன் சக்கரவர்த்தி-விஜய் சந்திப்பு

ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் கூட விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும்,
டெல்லி அரசி​யலை கருத்​தில் கொண்டு காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்தது. முடிவில், திமுக-வுடனேயே தொடரலாம் என காங்​கிரஸ் மேலிடம் முடிவு செய்து கூட்​ட​ணியை உறு​திப்​படுத்​தி​யது. புதிதாக கட்​சி தொடங்​கி​யிருக்​கும் பண்​ருட்​டி ராமச்சந்திரன் மட்டுமே தவெக-வுக்கு ஆதரவு (!!!)தெரி​வித்​துள்ளார். இதனால் விஜய்​யின் ‘அரசியல் வெடிகுண்டு’ நமத்துப் போய்​விட்​டது என்​று​தான் சொல்ல வேண்​டும் என்​கின்ற​னர், அரசியலை ஆழமாக உற்றுநோக்குபவர்கள்.

ஆட்சியில் அதிகாரம் என்பது கூட்டணிக்காக அல்ல…!!

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் அளித்த விளக்கம் விநோதமாக உள்ளது. அதாவது,“அதி​காரத்​தில் பங்கு என்று சொன்​னது கூட்​ட​ணிக்​காக அல்ல, அது மக்​களின் அதி​காரத்தை மக்​களிடமே ஒப்​படைப்​ப​தற்​கான ஜனநாயகப் பண்​பு; மற்ற கட்​சிகள் வரா​விட்​டாலும், தமிழக மக்​கள் எங்​கள் பக்​கம் இருக்​கி​றார்​கள்; 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்களை தேர்வு செய்​யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரு​கின்​றன; நாங்​கள்​தான் வெற்​றி​பெற்று ஆட்​சியை பிடிப்​போம்” எனக் கூறுகின்றனர். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை குறைகூற முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *