கந்தர்வகோட்டை தனித்தொகுதி (எண் – 178)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கர்தர்வக்கோட்டை தொகுதி, 2008ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.
இதுவரை மூன்று தேர்தலைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக இரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு முறையும் வென்றுள்ளன.
இங்கு முக்குலத்தோர், பட்டியலினத்தவர், உடையார், யாதவர், இஸ்லாமியர் என அடுத்தடுத்து பல சமூகத்தினர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளனர்.
சீட் கிடைக்கப்போவது யாருக்கு?
திமுக கூட்டணியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.சின்னதுரையே மீண்டும் சீட் கேட்கிறார்.
இத்தொகுதி ஒருவேளை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, கருணாநிதி ஆகியோர் சீட் பெற ஆயத்தமாகி வருகின்றனர்.
அதிமுகவில் கடந்தமுறை களம்கண்டவருக்கே மீண்டும் வாப்ப்பு!
அதிமுகவைப் பொறுத்தவரையில், கடந்த முறை போட்டியிட்ட ஜெயபாரதி மீண்டும் வாய்ப்பு கேட்கிறார். அவரைத்தவிர முன்னாள் எம்எல்ஏ ராஜூ, கலைப்பிரிவின் வடக்கு மாவட்ட அணிச் செயலாளர் குன்றாண்டார் கோயில் ஆ றுமுகம், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அசோக்ராஜா ஆகியோர் சீட் பெறுவதற்கான முயற்சியில் உள்ளனர்.
கடந்த தேர்தலில், எம்.சின்னதுரை 70,000 வாக்குகளையும், அதிமுகவின் ஜெயபாரதி 57,000 வாக்குகளையும் பெற்றனர். அமமுகவின் லெனினுக்கு சுமார் 13,000 வாக்குகள் கிடைத்தன.
வரும் தேர்தலில், தவெகவின் வரவால் வாக்குகள் சிதறும் என்று கருதப்படுகிறது. அக்கட்சி எவ்வளவு வாக்குகளைப் பெறும் எனக் கணிக்க முடியவில்லை.
எனினும், தற்போதைய சூழலில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பால் திமுக கூட்டணியே முந்துகிறது.
கந்தர்வகோட்டைதொகுதி, சட்டப்பேரவைதேர்தல், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, தவெக