Skip to content

கம்பம் தொகுதி; திமுக vs அதிமுக கடும் போட்டி;  4ஆவது வெற்றிக்கு திமுகவும்,  5ஆவது வெற்றியை குறிவைத்து அதிமுகவும் பலப்பரீட்சை!

கம்பம் தொகுதி (எண் – 201)

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதி, 1971ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.

இதுவரை 12 முறை தேர்தல் நடைபெற்றுள்ள இத்தொகுதியில், 4 முறை அதிமுகவும், காங்கிரஸ் மற்றும் தமாகா தலா இரு முறையும், திமுக மூன்று முறையும், மதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு முக்குலத்தோர், ஒக்கலிக கவுண்டர் சமூகத்தினர் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். இவர்கள் தவிர இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர் மற்றும் நாயுடு சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

சீட் பெற திமுக, அதிமுகவில் போட்டா போட்டி!

திமுகவில் தற்போதைய எம்எல்ஏ கம்பம் நா. ராமகிருஷ்ணன் மீண்டும் சீட் கேட்கிறார். இவர் தவிர, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிசாந்த் ஆகியோரும் சீட் பெற மெனக்கெடுகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. அதிமுகவில், முன்னாள் எம்எல்ஏ S.T.K ஜக்கையன் சீட் கேட்கிறார். இவர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்தவர்.

விஜய் பக்கம் போகும் இளைய தலைமுறையின் வாக்குகள் ?

முந்தைய தேர்தலில், கம்பம் ராமகிருஷ்ணன் 1,05,000 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் சையது கானுக்கு 62,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சுரேஷூக்கு 15,000 வாக்குகளும் கிடைத்தன.

வரும் தேர்தலில், விஜய் கட்சிக்கு முதல்முறை வாக்காளர்களின் ஓட்டுகள் பெருமளவு கிடைக்கும் எனக் கணிக்கப்படுகிறது.  அத்துடன் பிற கட்சிகளின் வாக்குகளையும் தவெக தட்டிப்பறிக்கும் எனத் தெரிகிறது.

ஆனாலும், தேர்தலில் திமுக- அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *