சென்னை,ஜன.25; சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது சுற்றுசூழல் மற்றும் ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவைக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் பாமக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
2023-ல் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு அனுமதி
கம்போடியாவைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் என்ற நிறுவனம் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னை, மாமல்லபுரம், கடற்கரை மற்றும் கோவளம் கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டுவதுதான் ஹெலிகாப்டர் நிறுவனம் வழங்கும் சுற்றுலா சேவை ஆகும்.
ஹெலிகாப்டர் புறப்படும்போதும், தாழ்வான உயரத்தில் பறக்கும்போதும் ஏற்படும் இரைச்சலால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வலசை வரும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிப்பு எனக்கூறி, தமிழ்நாடு அரசுக்கு பாமக கடிதம்
இதனைச் சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதினார். பின்னர் இதுதொடர்பாக பாமக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை நடத்தப்படுவதாகக்கூறி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி, கோவளத்தில் உள்ள ஹெலிகாப்டர் நிறுவனத்தின் அலுவலகத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மூடி முத்திரையிட்டார்.
மீண்டும் ஹெலிகாப்டர் சேவை: அன்புமணி கண்டனம்
இதுபோன்ற சூழலில் கோவளத்தில் ஹெலிகாப்டர் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் சூழலில், பயணிகள் பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் புறந்தள்ளிவிட்டு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு திமுக அரசு அனுமதியளித்திருப்பது கண்டித்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல்
சுற்றுலா என்ற பெயரில் மேல்தட்டு மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் என்றும், விபத்து அபாயங்கள் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, கோவளத்தில் ஹெலிகாப்டர் சேவைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
தவறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கையில் பாமக ஈடுபடும் என்று எச்சரித்துள்ள அன்புமணி, மக்களை திரட்டி போராட்டத்திலும் குதிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
