தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கர்-தினேஷ் கார்த்திக்கின் 15 ஆண்டுகால சாதனையை விராட் கோலி-ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி முறியடித்துள்ளது. ராய்ப்பூர் போட்டியில் அவர்கள் இருவரும் அசத்தலாக விளையாடி சதம் கண்டனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. இது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி எந்தவொரு விக்கெட்டுக்கும் எடுத்துள்ள அதிகபட்ச ரன் கூட்டணியாகும். முன்னதாக, 2010ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்திருந்தனர்.
சச்சின்-தினேஷ் கார்த்திக் சாதனை முறியடிப்பு; கோலி, கெய்க்வாட் அசத்தல்
