Skip to content

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் இன்று வெளியாகும் தீர்ப்பு!

மதுரை,மார்ச்.23; தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இன்று (மார்ச் 23, 2026) தீர்ப்பளிக்கிறது. சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வருகிறது.

வழக்கின் பின்னணி: ஒரு கருப்புப் பக்கம்

தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜூம், அவரது மகன் பெனிக்​ஸும் செல்​போன் கடை நடத்தி வந்​தனர்.

கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா முழு முடக்கத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி ஜெய​ராஜ், பெனிக்ஸ் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் விசா​ரணைக்​காக சாத்தான்குளம் காவல் நிலை​யத்திற்கு அழைத்​துச் சென்​றனர்.

தந்தை, மகன் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டதில் மரணம்

அங்கு தந்​தை, மகன் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பலத்த காயமடைந்த நிலை​யில் முதலில் பெனிக்​ஸ், பின்​னர் ஜெய​ராஜ் ஆகிய இரு​வரும் அடுத்​தடுத்து பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

சிபிஐ விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்

இந்த இரட்டை காவல் நிலைய மரணம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த இந்​தச் சம்​பவம் தொடர்​பான வழக்கை சென்னை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றியது.

காவல்துறையினர் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

இதையடுத்து சிபிஐ போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு கணேஷ், தலை​மைக் காவலர்​கள் முரு​கன், காவலர்​கள் முத்​து​ ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயில் முத்து உள்​ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் கடந்த 5 ஆண்​டு​களாக விசா​ரணை​யில் இருந்​தது. சிபிஐ குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்து வழக்​கின் விசா​ரணை தீவிர​மாக நடை​பெற்று வந்​தது.

குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சிறையில்…

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தள்ளுபடி செய்யப்பட்டன. கைதான நாளி​லிருந்து அவர்கள் அனைவரும் சிறை​யில் உள்​ளனர்.

இந்த வழக்​கின் விசா​ரணையை 6 மாதங்​களில் முடிக்க உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டது. கால அவகாசம் முடிந்த நிலை​யில், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசா​ரணை நீதி​மன்​றம் தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 3 மாதம் அவகாசம் வழங்கி கடந்​தாண்டு நவம்​பர் 26-ல் உத்​தர​விட்​டது.

5 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெளியாகிறது தீர்ப்பு

இதையடுத்து விசா​ரணை நீதி​மன்​றத்​தில் விசா​ரணை வேகமெடுத்​து, நாள்தோறும் விசா​ரணை நடந்​தது. இது​வரை அரசுத் தரப்​பில் 52 சாட்​சிகள், குற்​றம் சாட்​டப்​பட்​டோர் தரப்​பில் 7 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர்.

271 ஆவணங்​கள் குறி​யீடு செய்​யப்​பட்​டுள்​ளன. லத்தி உள்​ளிட்ட 57 சாட்​சி​யப் பொருட்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. விசா​ரணை முடிந்த நிலை​யில் தீர்ப்பு தள்​ளிவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த வழக்​கில் இன்று (மார்ச் 23) மதுரை மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளிக்​கிறது.

நீதித்துறை மீதான எதிர்பார்ப்பு

இந்த வழக்கு இந்தியாவில் ‘காவல் நிலைய மரணங்கள்’ (Custodial Deaths) குறித்த விவாதத்தை உலக அளவில் கொண்டு சென்றது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்

சாத்தான்குளம் சம்பவம் என்பது காவல்துறை அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் இன்று வெளியாகவிருக்கும் தீர்ப்பு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நிகழாமல் தடுக்க ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *