Skip to content

சிட்னி துப்பாக்கிச் சூடு; தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் இந்தியர்? ஹைதராபாத்துக்கு வந்த சென்றதாக அதிர்ச்சித் தகவல்!

அருகே, டிசம்பர் 14, 2025 அன்று நடந்த யூதர்களின் நிகழ்ச்சி ஒன்றின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூரத் தாக்குதலை நடத்திய இரண்டு நபர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கடைசியாக 2022-ஆம் ஆண்டு ஹைதராபாத்திற்கு வந்து சென்றார் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் இந்தியத் தொடர்பு மற்றும் பின்னணி

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம், ஐதராபாத்தில் உள்ள டோலிச்சவ்கியைச் சேர்ந்தவர் என மத்திய அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் 1998-ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். எனினும், தனது இந்திய பாஸ்போர்ட்டை அவர் தொடர்ந்து வைத்துள்ளார் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சஜித் அக்ரம், ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற பிறகு ஒரு ஐரோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஆஸ்திரேலியாவிற்குப் பிறகு இந்தியாவுக்கு “இரண்டு அல்லது மூன்று முறை” மட்டுமே வந்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தந்தையின் மரணத்துக்குகூட மகன் இந்தியா வரவில்லை

ஐதராபாத்தில் வணிகவியலில் இளங்கலை முடித்த பின்னரே அவர் ஆஸ்திரேலியா சென்றார். 2017-ஆம் ஆண்டு தனது தந்தை இறந்தபோது கூட அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா வரவில்லை என்றும் ஓர் அதிகாரி கூறினார். சஜித்தின் சகோதரர் ஐதராபாத்தில் மருத்துவராக இருக்கிறார்.

உள்ளூர் தொடர்பு மறுப்பு மற்றும் வெளிநாட்டுப் பயணம்

சஜித் அக்ரமுக்கு இந்தியாவில் ஏதேனும் உள்ளூர் பயங்கரவாதத் தொடர்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, அதிகாரிகள், “தற்போதைய ஆரம்பகட்ட விசாரணையில் எந்தவொரு உள்ளூர் தொடர்பும் கண்டறியப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் அவரது செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு நேரடி அணுகல் இல்லை என்று தெரிவித்தனர

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு நபர், சஜித்தின் மகனான நவீத் அக்ரம் ஆவார். ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் அந்நாட்டின் குடிமகன் ஆவார். நவீத் காவல்துறையினரால் சுடப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சஜித் அக்ரம் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சென்றுள்ளார்

சஜித் அக்ரம் (இந்திய பாஸ்போர்ட்) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (ஆஸ்திரேலியக் குடிமகன்) இருவரும் நவம்பர் 1, 2025 அன்று சிட்னியிலிருந்து பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாக பிலிப்பைன்ஸ் குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *