Skip to content

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று திறப்பு: நேரம் மற்றும் கட்டண விவரங்கள்!

சென்னை,ஜன.24; சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அடையாறு தொல்காப்பிய பூங்கா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு இன்று (24.01.2026) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காவிற்குச் செல்ல விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்புகள் இதோ.

புதுப்பொலிவுடன் தொல்காப்பிய பூங்கா

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படும் இந்த பூங்கா, அடையாறு உப்பங்கழிப் பகுதியில் சுமார் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, தற்போது கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி மற்றும் பார்வையாளர்கள் நேரம்

பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

காலை நேரம்: 6.30 மணி முதல் 8.00 மணி வரை.

மாலை நேரம்: 4.30 மணி முதல் 6.00 மணி வரை.

குறிப்பாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு அமர்விலும் (Session) அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டண விவரங்கள்

பூங்காவைப் பயன்படுத்துபவர்களுக்கு மாதவாரி மற்றும் வருடாந்திர அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன:

ஒரு மாதத்திற்கு: ரூ. 250

3 மாதங்களுக்கு: ரூ. 750

6 மாதங்களுக்கு: ரூ. 1,250

ஒரு ஆண்டிற்கு: ரூ. 2,500

ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

பூங்காவிற்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முன்னதாகவே தங்களது நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான விவரங்களை www.crrt.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த இடமாகத் திகழும் தொல்காப்பிய பூங்கா, சென்னையின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட இந்த பூங்காவை மக்கள் சரியாகப் பயன்படுத்தி, இயற்கையைப் பாதுகாப்பதில் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *