Skip to content

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. தேர்தல் ஆணையம் இரண்டு முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (19.12.2025)மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னை மாவட்டத்திற்கா வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 40,04,694 பேரில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

* எஸ்.ஐ.ஆருக்கு முன் – 40,04 694

* எஸ்.ஐ.ஆருக்கு பின் -25,79,676

* நீக்கம் – 14,25,018

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 26,79,676 ஆகும்.

* இறந்த வாக்காளர்கள் – 1,56,555

* முகவரியில் இல்லாதவர்கள் 27,328

* குடி பெயர்ந்தோர் – 12,22,164

* இரட்டை பதிவுகள் – 18,772

* மொத்தம் நீக்கப்பட்டோர் 13,25,018

*சென்னையில் ஆண்கள் 12,47,690, பெண்கள் 13,31,243 வாக்காளர்கள், இதர பிரிவினர் 743 பேர்.

சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *