சென்னை,மார்ச்.17; பாலியல் வன்கொடுமை,போதைப்பொருள் புழக்கம், படுகொலைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை கே.கே நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
விண்ணை முட்டும் விலைவாசி,; போட்டோ ஷூட் நடத்தும் ஸ்டாலின்
அப்போது அவர், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது-எண்ணெய், பால் பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துவிட்டது- திமுக ஆட்சியில் சொத்து வரி 6 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது- மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது-மக்கள் குடும்பம் நடத்தவே சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது என்று வசைபாடினார்.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் நாள்தோறும் போட்டோஷூட் நடத்தி வருவது தான் திமுகவின் சாதனை என்று விமர்சித்தார். டாஸ்மாக்கில் 24,0000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர் என இபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.
பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை
திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை எனும் அளவுக்கு குற்றங்கள் நடப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது-போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது- பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிவதாக அவர் தெரிவித்தார்.
கனிமவள கொள்ளை, கடன் வாங்குவதில் முதல் மாநிலம்
கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது- கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன- வளர்ச்சியில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் கூறுகிறார்-ஆமாம், கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு தான்-அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டது திமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் 246 கொலைகள் நடந்துள்ளன- தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பில்லை – ஒரு டிஜிபியைக்கூட நியமிக்க முடியாத சூழலில் திமுக அரசு உள்ளது என்றும் இபிஎஸ் கூறினார்.
வாக்குறுதிகள் தொடர்பாக பச்சை பொய் பேசுகிறார்- மு.க.ஸ்டாாலின்
வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பச்சைப் பொய்கூறுகிறார் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை – எனவே, மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
