புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், 2 நாட்களில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் தவெகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அங்கும் போட்டியிட தவெக ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் நாளை தவெக சார்பில் சாலை வலம் எனப்படும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தை காரணமாகக் காண்பித்து விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அதேநாளன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என தவெகவினர் ஆலோசித்தனர். ஆனால், அது சாத்தியமில்லை எனத் தெரியவந்ததால், வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
