Skip to content

திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான்: தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு!

மாமல்லபுரம்,ஜன.25; திமுகவை வீழ்த்தும் வல்லமை படைத்த ஒரே தலைவர் விஜய்தான் என்று, தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 10ஆம தேவியின் முடிவடைகிறது. இதனையடுத்து மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்

அதேவேளையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும்தேர்தலுக்கா களப்பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிட்டன.

தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பூத் கமிட்டி அமைப்பது போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதில் பிரதான கட்சிகளுக்கு இணையாக புதுவரவான தவெகவும் முழு முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தவெகவின் மாநில மற்றும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று (25.01.2026) நடைபெற்றது.

“அனைத்துக் கட்சியினரின் வீடுகளிலும் விஜய்க்கு வாக்கு உள்ளது”

இதில் பேசிய அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், திமுக உள்பட அனைத்துக் கட்சியினர் வீடுகளிலும் விஜய்க்கு வாக்கு உள்ளது – விஜய்யைக் கண்டு அனைத்துக் கட்சியினரும் ஆடிப்போய் உள்ளனர்-கூட்டணி இல்லை என்று கட்சியினருக்கு கவலை வேண்டாம்-திமுகவை வீழ்த்த உள்ள ஒரே தலைவர் விஜய் தான் என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

“பத்து கட்சி கூட்டணியை விஜய் தூள் தூளாக்குவார்”

10 கட்சி கூட்டணியை விஜய் தூள் தூளாக்குவார்; தூங்குவோர், வயதானவர்கள் அருகில் விசில் அடிக்க வேண்டாம்; அவர்கள் நிலைத் தடுமாறிவிடுவார்கள்; ஓட்டு போய்விடும், கவனமாக இருக்க வேண்டும்; எம்ஜிஆர் உள்பட பல தலைவர்களை பார்த்தவன் நான், ரூ.1,000 கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய் என்று செங்கோட்டையன் பேசினார்.

தவெக கேட்டபடி விசில் சின்னம் கிடைத்துவிட்டதால், அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். அவர்களை சுறுசுறுப்பாக களப்பணியாற்றுமாறு தவெக நிர்வாகிகள் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *