திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் வைபவம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் உச்ச நிகழ்ச்சியாக, 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு, மகா தீபத்தை பரவசத்துடன் பார்த்தனர். மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானவர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர்.
