திருவையாறு தொகுதி (எண் – 173)
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு தொகுதி, 1957 முதல் இதுவரை 15 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இங்கு திமுக எட்டு முறையும், அதிமுக ஐந்து முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியில் கள்ளர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், முத்தரையர், உடையார், மூப்பனார், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினர் பெருமளவில் உள்ளனர்.
சிட்டிங் திமுக எம்எல்ஏ மீண்டும் களம்காண விருப்பம்
திமுகவைப் பொறுத்த வரையில், தற்போதைய எம்எல்ஏவான துரை சந்திரசேகரன் மீண்டும் சீட் கேட்கிறார்.
அதேசமயம், கல்லணை செல்லக்கண்ணு, களிமேடு செல்வம், முகில் வேந்தன் ஆகியோரும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.
அதிமுகவில், முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி, இளங்கோவன், சூர்யபிரகாஷ் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர்.
முந்தைய தேர்தலில் திமுகவின் துரை சந்திரசேகரனுக்கு 1,03,000 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக ஆ தரவு பெற்ற பாஜக வேட்பாளர் பூண்டி எஸ். வெங்கடேசன் சுமார் 50,000 வாக்குகளைப் பெற்றார். அமமுகவின் கார்த்திகேயன் 37,000 வாக்குகளைப் பெற்றார்.
அமமுகவும் தொகுதியை கேட்க வாய்ப்பிருப்பிருக்கிறது
கடந்த முறை அமமுக அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் ஒன்று என்பதால், அந்தக் கட்சியும் இத்தொகுதியை கேட்க வாய்ப்புள்ளது.
தவெக வாக்குகள் பிளவுபடுவதை கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும் எனப் பேசுகின்றனர்.
ஆனால், சிறுபான்மையினரின் வாக்குகள் சாதகமாக இருப்பது, திமுகவிற்கு பிளஸ் பாயின்ட்.. இருப்பினும், கடந்த காலத்தேர்தல் கணக்குகள் மற்றும் தற்போதைய சூழல் போன்றவற்றை வைத்துப் பார்க்கையில், திருவையாறு தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்பது நிசர்சனமான உண்மை.
