Skip to content

தீ பறக்கும் தியாகராய நகர் தொகுதி; பம்பரமாய் சுழன்று பணியாற்றும் வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

சென்னை,ஏப்.07; சென்னை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் தொகுதி தி.நகர் என்றழைக்கப்படும் தியாகதராய நகர் தொகுதி. தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கியமான வணிக மையமாகவும் திகழ்கிறது தியாகராய நகர்.

கோடம்​பாக்​கம், மேற்கு மாம்​பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்​ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்​கிய பகு​தி​கள் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன. முதன்மை வணிக மைய​மாக​ மட்டுமின்றி, மக்​கள் நெருக்​கம் மிகுந்த குடி​யிருப்பு பகு​தி​யாக​வும் திகழ்​கிறது.

சென்னையின் அடையாளமாகத் திகழும் பகுதிகளை உள்ளடக்கியது

பிர​தான​மான கடைகள், ரங்​க​நாதன் தெரு, சிவா-​விஷ்ணு கோயில், பனகல் பூங்​கா, பாண்டி பஜார், வெங்​கட​நா​ராயணா சாலை போன்​றவை தியாகராய நகர் தொகுதியின் முக்​கிய அடை​யாளங்​களாகும்.

தியாகராய நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாடார், முதலி​யார், நாயுடு, வன்​னியர், பிராமணர்​, பட்டியலினத்தவர் என அனைத்து சமூக மக்​களும் வசிக்​கின்​றன

எத்தனை பாலம் கட்டினாலும் தீராத போக்குவரத்து நெரிசல்!

எப்​போதும் பரபரப்​பாகக் காணப்​படும் தியாகராய நகரின் பிர​தான பிரச்​னை​யாக இருப்​பது போக்​கு​வரத்து நெரிசல்​தான். எத்​தனை பாலங்​கள் கட்​டப்​பட்​டாலும் போக்​கு​வரத்து பிரச்​னைக்கு தீர்வு காண முடியவில்லை.

பேருந்​துகள் மற்​றும் மின்​சார ரயில்​களில் ஆயிரக்​கணக்​கான மக்​கள் வந்து செல்​லக்​கூடிய இப்​பகு​தி​யில் தேவை​யான கழிப்​பறை வசதி​கள் இல்லை என்பது நீண்டகாலமாக கூறப்படும் குற்றச்சாட்டாகும்.

வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதியில்லை

கடைகளுக்கு வருவோர் வாக​னங்​களை நிறுத்த போதுமான இடவசதி இல்​லாதது, மழைக்​காலத்​தில் சுரங்​கப்​பாதைகளில் குளம்​போல் தண்​ணீர் தேங்​கு​வது, தின​மும் டன் கணக்​கில் தேங்​கும் குப்​பைகள், ஆயிரக்​கணக்​கான வாக​னங்​களின் இயக்​கத்​தால் உரு​வாகும் காற்று மாசு​பாடு என இப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

2021-ல் சொற்ப வாக்குகளில் வென்ற திமுக வேட்பாளர்

கடந்த 1957 தொடங்கி இது​வரை நடை​பெற்ற 15 தேர்​தல்​களில் அதி​கபட்​ச​மாக திமுக 6 முறை​யும், அதி​முக 4 முறை​யும், காங்​கிரஸ் 2 முறை​யும் வெற்றி பெற்​றுள்​ளன. கடந்த 2021 தேர்​தலில் திமுக வேட்​பாள​ராக மறைந்த ஜெ.அன்​பழக​னின் சகோ​தரர் ஜெ.கருணாநிதி வெற்​றி​பெற்று எம்​எல்ஏ ஆனார்.

அத்​தேர்​தலில் அவர் 56 ஆயிரத்து 35 வாக்​கு​களும், அதி​முக வேட்​பாளர் தியாகராய நகர் சத்யா 55 ஆயிரத்து 898 வாக்​கு​களும் பெற்​றனர். 137 வாக்​கு​கள் மட்​டுமே கூடு​தலாகப் பெற்று ஜெ.கருணாநிதி வெற்றி பெற்​றார்.

தற்போதைய திமுக எம்எல்ஏ-வுக்கு சீட் மறுப்பு

தற்​போது அவருக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டு. ஜெ.அன்​பழக​னின் மகன் ராஜா அன்​பழக​னுக்கு போட்​டி​யிட சீட் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக சார்​பில் கடந்த தேர்​தலில் தோல்​வியடைந்த தியாகராய நகர் சத்தி​யா, நாம் தமிழர் கட்சி சார்​பில் அனுஷா விஜய கு​மார், தவெக சார்​பில் என்​.ஆனந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இத்​தொகு​தி​யில் திமுக – அதி​முக ஆகிய இரு கட்​சிகளும் சமபலத்​துடன் இருப்​ப​தாகவே அரசி​யல் பார்​வை​யாளர்​கள் கருதுகிறார்​கள். கடந்த முறை நூலிழை​யில் வெற்​றி​வாய்ப்பை இழந்த சத்​யா, கூட்​டணி கட்​சிகளின் பலத்​தால் இந்​த​முறை வெற்றி பெற்று விடலாம் என கணக்​குப் போடு​கிறார்.

புதிய வரவான தவெக-வினால் திமுக, அதிமுகவுக்கு சிக்கல்

அதே​நேரம் புதிய வரவான தவெக வேட்பாளர், எந்​தக் கட்​சி​யின் வாக்​கு​களைப் பிரிப்பார் என்​ப​தைப் பொறுத்தே வெற்​றி தீர்​மானிக்கப்படும் என்று தெரி​கிறது. எனவே இந்த முறை​யும் திமுக – அதி​முக இடையே போட்டி கடுமை​யாக இருக்​கும்.

ஆளும் திமுக மீது ஆங்காங்கே அதிருப்தி நிலவுவது அக்கட்சிக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

யார் வென்றாலும் வாக்கு வித்தியாசம் குறைவாகத்தான் இருக்கும்?

எந்​தக்​கட்சி வென்​றாலும் வாக்கு வித்​தி​யாசம் மிக​வும் குறை​வாகவே இருக்​கும் என்று கணிக்​கப்​படு​கிறது. வெற்​றியை தம் வசமாக்க இரு கட்​சி​யினரும் அனல்பறக்க களப்பணியாற்றி வருகின்​றனர்​.

தியாகராய நகர் தொகுதியில் சுமார் 1,55,000 வாக்காளர்கள் உள்ளனர். பிற தொகுதிகளைப் போன்றே இங்கும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 5,000-க்கும் அதிகமாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *