Skip to content

“தேர்தல் பரப்புரையில் மெத்தனம் வேண்டாம்” – திமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை,ஏப்.04; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு, பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் (ஏப்ரல் 6, திங்கள்) முடிவடைய உள்ளதால், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இதுபோன்ற சூழலில், ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (ஏப்ரல் 3, வெள்ளி) நடைபெற்றது.
இதில் மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், பகு​திச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் பலரும் கலந்து கொண்​டனர்.

பரப்புரையில் மெத்தனம் கூடாது; சுறுசுறுப்பாக பணியாற்றுக

இந்த கூட்​டத்​தில் தொகு​தி​களில் இது​வரை செய்​யப்​பட்ட பணி​கள், அடுத்தகட்ட நடவடிக்கை​கள், பூத் கமிட்​டி​களின் நிலையை ஆய்வு செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு அம்சங்​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டன.

அப்​போது தேர்​தலுக்கு இன்​னும் குறைந்த கால அவகாசமே உள்ளதால், நிர்​வாகி​கள் மெத்​தன​மாக இருக்​காமல் பரப்புரையை தீவிரப்​படுத்த வேண்​டும் என்று மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

வெற்றி ஒன்றே இலக்கு, செயல் வீரர்களுக்குப் பாராட்டு

இதுதொடர்​பாக முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘வெற்றி ஒன்றே இலக்​கு, ஓய்​வின்றி உழைக்​கும் கட்​சி​யின் செயல்​வீரர்​களுக்​குப் பாராட்​டு​கள்; நேற்று இரவு கோவை​யில் முதற்​கட்ட பரப்​புரை பயணத்தை முடித்​து​விட்​டு, சென்​னைக்கு திரும்​பினேன்; இன்று காலை (ஏப்ரல் 4, 2026) தமி​ழ்நாடு முழு​வதும் களப்​பணி​யாற்றி மக்​களின் நம்​பிக்​கையை வாக்​கு​களாக உறுதி செய்​து​வ​ரும், கட்சி நிர்​வாகி​களு​டன் உரை​யாடி அவர்​களை ஊக்​கப்​படுத்​தினேன்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், அவர்களும் தீவிர பரப்புரையில் இறங்குவார்கள் என நம்பப்படுகிறது.

திமுகவில் இணைந்த அமுமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் 2 பேர்

இதனிடையே, அமமுக முன்​னாள் எம்​எல்​ஏ-க்​களான சி.கோ​பால், என்​.ஜி.​பார்த்​திபன் ஆகி​யோர் தங்​கள் ஆதர​வாளர்​களு​டன் நேற்று (ஏப்ரல் 3, வெள்ளி) திமுக-​வில் இணைந்​தனர். இவர்​கள் இரு​வ​ரும் டிடி​வி.​தினகரனுக்கு மிக நெருக்​க​மாக இருந்​தவர்​கள் எனவும், தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​புக் கிடைக்​காத அதிருப்​தி​யில் திமுக-​வில் இணைந்​த​தாக​வும் கூறப்​படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *