தொடர் மழை காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் (03.12.2025) கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெருமளவு மழை பெய்ததால், இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2025) விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மழை பாதிப்பு; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
