சென்னை,மார்ச்.25;; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஜக: தளி, மொடக்குறிச்சி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், மதுரை தெற்கு, சாத்தூர், பழனி, அரவக்குறிச்சி, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, மயிலாடுதுறை, திருச்செந்தூர், நெல்லை, கும்பகோணம், வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர், வானூர், திருச்செங்கோடு, அந்தியூர், திருப்பூர் தெற்கு, திருத்தணி, ராசிபுரம், குன்னூர்.
பாமக: பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி, குன்னம், விழுப்புரம், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், திருவள்ளூர், சங்ககிரி, பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, ஜெயங்கொண்டம், திண்டிவனம் அல்லது அரூர், மயிலம், வானூர் அல்லது காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர், புவனகிரி.
அமமுக: சைதாப்பேட்டை, சோளிங்கர், பூந்தமல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்திய தொகுதி, தஞ்சை, காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி.
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் போட்டியா?
இதனிடையே, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், அங்கு களைகட்டியுள்ளது. தவெகவினர் தற்போதே அங்கு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.
இதேபோன்று தவெக-வைச் சேர்ந்த வேறு சில முக்கிய பிரமுகர்கள் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் தொகுதிகள் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.
தவெகவின் பிற தலைவர்கள் எங்கு போட்டியிட வாய்ப்பு?
அதன்படி, செங்கோட்டையன் – கோபிச்செட்டிபாளையம், ஆதவ் அர்ஜூனா – வில்லிவாக்கம், அருண் ராஜ் – திருச்செங்கோடு, என்.ஆனந்த் – தியாகராய நகர் அல்லது விழுப்புரம், ஜேசிடி பிரபாகர் – ஆயிரம் விளக்கு, மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி, செல்வப்பெருந்தகை தொகுதி மாற வாய்ப்பு?
திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை பெற்றுள்ள விசிக, தாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலில் திருப்பெரும்புதூர் தொகுதியை சேர்த்துள்ளது. அதனால், கடந்த தேர்தலில் அங்கு வெற்றிபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இந்த முறை எழும்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை முதல்வர் உதயநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
