பெருந்துறை தொகுதி (எண் – 103)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை தொகுதி, 1957 தொடங்கி இதுவரை 15 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இதில், அதிமுக 6 முறையும், அக்கட்சியின் ஜெ அணி ஒரு முறையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், திமுக இரு முறையும், காங்கிரஸ் மற்றும் சம்யுக்தா சோசலிச கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் இவர்கள் தான். அருந்ததியர், நாடார் மற்றும் கிறிஸ்தவர்களும் பரவலாக வாழ்கின்றனர்.
திமுகவுக்கு சீட்டா அல்லது கொமதேகவுக்கு வாய்ப்பா?
திமுகவில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சீட் பெற முனைப்புடன் உள்ளார். அவர் தவிர, ஒன்றியச் செயலாளர்கள் பெரியசாமி, கே.பி.சாமி, அரசு வழக்கறிஞர் திருமலை ஆகியோரும் சீட்டுக்கான ரேசில் உள்ளனர்.
ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், கொ.ம.தே.க-வைச் சேர்ந்த பாலு என்பவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏ ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அருணாசலம், ஒன்றியச் செயலாளர்கள் ரஞ்சித் ராஜ், அருள்ஜோதி செல்வராஜ், திங்களூர் கந்தசாமி ஆகியோர் சீட்டுக்கு காய் நகர்த்துகின்றனர்.
முதல்முறை வாக்காளர்கள் ஓட்டெல்லாம் விஜய்க்கு தானா?
முந்தைய தேர்தலில், அதிமுகவின் ஜெயக்குமாருக்கு 85,000 வாக்குகளைப் பெற்று வென்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த கொ.ம.தே.க-வின் பாலுவுக்கு 71,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் லோகநாதனுக்கு 10,000 வாக்குகளும் கிடைத்தன.
வரும் தேர்தலில், தவெக விஜய் ரசிகர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் வாக்குகளை கணிசமாக அள்ள வாய்ப்புள்ளது. இது தேர்தலில் முடிவுகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும், தற்போதைய சூழலில் அதிமுக-திமுக இடையில்தான் கடும் போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
