Skip to content

மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் விஜய்; மகளிர் உதவித்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசம்!

மாமல்லபுரம், மார்ச்.08; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட சவால்களைத் தொடர்ந்து, விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தைத் தனித்து வழிநடத்த முடிவு செய்துள்ளார்.

மாமல்லபுர மகளிர் தின விழாவில் அறிவிப்புகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விஜய் பங்கேற்கும் மகளிர் தின விழா, நேற்று (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது பெண்களுக்கான அதிரடியான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார். அவை பின்வருமாறு;

  1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனித்துறை உருவாக்கப்படும்.
  2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2500 வழங்கப்படும்

(நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலக்கு)

  1. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்
  2. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை.
  3. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணவர்களின் தாய் (அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை.
  4. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.
  5. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக “ராணி வேலுநாச்சியார் படை” உருவாக்கப்படும்.
  6. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.
  7. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்.
  8. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்.
  9. சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்.
  10. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.

விஜய் வெளியிட்டுள்ள இந்த அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் தவெகவினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேவேளையில் திமுக அரசில் நடைமுறையில் பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றி, தொகை உயர்த்தி விஜய் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *