Skip to content

மாநிலங்களவை எம்பி பதவி வேண்டாம், ஆனால் 8 எம்எல்ஏ சீட் வேண்டும்; அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் தமாகா!

சென்னை,பிப்.25; மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டாம், அதற்கு மாறாக சட்டப்பேரவை தேர்தலில் 8 எம்எல்ஏ சீட் வேண்டும் என்று அதிமுகவிடம் தமாகா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மாநிலங்​களவை எம்​பிக்​களான கனி​மொழி என்​விஎன்​ சோமு (தி​முக), திருச்சி சிவா (தி​முக), என்​ஆர் இளங்கோ (தி​முக), அந்​தி​யூர் செல்​வ​ராஜ் (தி​முக), தம்​பிதுரை (அதி​முக), ஜிகே ​வாசன் (தமா​கா) ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் ஏப்​ரல் 2-ம் தேதி முடிவடைகிறது.

6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வுசெய்ய மார்ச் மாதம் தேர்தல்

இதனையடுத்து புதி​தாக 6 எம்​பி-க்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் அடுத்த மாதம் (மார்ச்) 16ஆம் தேதி நடை​பெறுகிறது. தமிழ்நாடு சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் அல்லது மே மாதம் தேர்​தல் நடை​பெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், 6 மாநிலங்​களவை எம்​பி-க்​களுக்​கான தேர்​தல் முன்​ன​தாகவே நடை​பெறவுள்​ளது. இந்த 6 எம்​பி-க்​களில் 4 பேரை திமுக​வும், 2 பேரை அதி​முக​வும் தேர்​தெடுக்​க​வுள்​ளது.

மாநிலங்களவை எம்பி சீட் வேண்டாம்; 8 எம்எல்ஏ சீட் வேண்டும்

அதி​முக சார்​பில் கடந்த முறை தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் மாநிலங்​களவை உறுப்பினராக தேர்வு செய்​யப்​பட்​டார். இந்த முறையும் அதி​முக கூட்​ட​ணி​யில் உள்ள ஜிகே வாசன் மாநிலங்​களவை உறுப்பினர் பதவி வேண்​டாம் என்று தெரி​வித்​துள்​ளார். அதற்கு பதிலாக சட்​டப்​பேரவை தேர்​தலில் கூடு​தல் இடங்​களை கேட்​டுள்​ளார்.

8 இடங்கள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளோம்: தமாகா

இதுதொடர்​பாக தமாகா மூத்த தலை​வர்​களிடம் கேட்ட போது, “தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலை அதி​முக, பாஜக உள்​ளிட்ட கூட்​டணி கட்​சிகளு​டன் இணைந்து தமாகா சந்​தித்​தது; அந்த தேர்​தலில் தமாகா 6 இடங்​களில் போட்​டி​யிட்​டது; அடுத்து 2024-ல் நடை​பெற்ற மக்​களவை தேர்​தலில் 3 இடங்​களில் தமாகா நின்​றது; தமிழ்நாட்டில் வரவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் தமாகா​வுக்கு 12 தொகு​தி​களை கேட்​டு, 15 தொகு​தி​கள் அடங்​கிய பட்​டியல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதில் குறைந்​தது 8 இடங்​களை கட்​டா​யம் கொடுக்க வேண்​டும் என்று கேட்​டிருக்​கிறோம். அதனால் தான் மாநிலங்​களவை உறுப்பினர் பதவி வேண்​டாம்​ என்​று தெரி​வித்​துவிட்டோம்​” என்று கூறினர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *