Skip to content

விஜய் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது என்று அண்ணாமலை அதிரடி பதில்!

சென்னை,மார்ச்.11; அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெகவை இணைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

50 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் கூட விஜய் தரப்பிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன.

கொள்கை எதிரி என முழங்கிவிட்டு பாஜகவுடன் எப்படி கூட்டணி?

ஆனால், தவெக தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கொள்கை எதிரி என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது அந்தக் கட்சியுடன் எப்படி கூட்டணி வைத்துக்கொள்வது? என தவெக தலைமை கருதுவதாகத் தெரிகிறது.

இதுபோன்ற சூழலில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில் நேற்று (மார்ச் 10, செவ்வாய்) சாட்சியம் அளித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தவெக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

டீயும் காபியும் ஒன்றாக கலக்காது: அண்ணாமலை பதில்

அதற்கு அவர், விஜய் கட்சி​யுடன் அதிகாரப்​பூர்வப் பேச்சு​வார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.”என்னைப் பொறுத்​தவரை “டீயும் காபியும் ஒன்றாகக் கலக்​காது” – ஏனென்​றால், சித்​தாந்​தங்கள் வேறானவை; தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது எனப் பதிலளித்தார்.

கள்ளக்​குறிச்சி விஷ சாராய விவகாரத்​தில் பாஜகவுக்​கும், தனக்​கும் தொடர்​பிருப்​பதாக அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்​பட்ட வழக்​கில் இன்றைக்கு (மார்ச் 10) சாட்​சியம் அளித்​திருப்பதாக அண்ணாமலை கூறினார்.

“டிஆர் பாலு மீது புதிய அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன்”

இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்​காததா​லும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்​காததா​லும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட்டுள்​ளது. கடந்த முறை நீதி​மன்ற விசா​ரணை​யின் போது, என் மீது அபாண்​டமான குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்த திமுக எம்.பி டி.ஆர்​.பாலு மீது இன்று புதிய அவதூறு வழக்கு தாக்கல் செய்​யப்​பட்டுள்​ளது. இதற்கான சாட்​சியம் ஏப்ரல் 7-ம் தேதி அளிக்​கப்​படும்.

“திமுக ஆட்சியில் சொல்லிக் கொள்ளும்படி சாதனை எதுவும் இல்லை”

யார் மீதும் அவதூறு வழக்கு தொடரக்​கூடாது என்ற கொள்​கை​யில் இருந்​தவன் நான்; ஆனால், திமுக​வின் எல்லை​யற்ற வன்மப் பேச்​சுகளுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே, என் வாழ்​நாளில் முதல்​முறையாக இந்த சட்டப் போராட்டத்​தைத் தொடங்​கி​யுள்​ளேன்; முதலமைச்சரின் கண்ணீர் அவரது கட்சிக்காக இருக்க வேண்​டுமே தவிர, அதிமுகவுக்காக அல்ல; ஐந்து ஆண்டு கால ஆட்சி​யில் சொல்​லிக்​கொள்​ளும் படி எந்த சாதனையும் இல்லாததால், மக்களைத் திசைதிருப்ப முதல்வர் ‘நீலிக்​கண்​ணீர்’ வடிக்​கிறார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

வாஜ்பாய் ஆட்சியில் திமுகவை பாஜக விழுங்கியதா?

“பாஜக அதிமுகவை விழுங்​கிவிடும்” என முதல்வர் ஸ்டா​லின் சொல்​கிறார்; “1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்ட​ணி​யில் இருந்​த​போது திமுக விழுங்​கப்​பட்டதா? அல்லது தற்போது கூட்ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்​கிவிடு​மா?” மாநில தலைவர் நயினார் நாகேந்​திரன் கூறியதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

பாஜகவின் மாநில செய்தி தொடர்​பாளர் பதவியிலிருந்து ஏ.என்​.எஸ்.பிரசாத் நீக்​கப்​பட்டது குறித்​துத் தவறான பிம்​பத்தை உருவாக்க வேண்​டாம்; அவர் கட்சி​யின் மூத்த உறுப்​பினர், அவருக்கு விரைவில் வேறு முக்​கியப் பொறுப்​பு​கள் வழங்​கப்​படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *