Skip to content

2026 தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும்; திருப்பூரில் செங்கோட்டையன் பேச்சு!

திருப்பூர், டிச.27; திருப்பூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று (26.12.2025) நடைபெற்றது. இதில் தவெக தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார்.

தமிழ்நாட்டுக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை-விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

2026 தேர்தலில் தவெக வெற்றிவாகை சூடும்: செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிவாகை சூடப்போகிறது என்பதை இந்த கூட்டத்தை பார்க்கும்போதே உணரமுடிகிறது என அவர் பேசினார். தவெக கூட்டத்தைப் பார்த்து, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று பலரும் அச்சப்படுகின்றனர் என, செங்கோ்டைைபேசினார்.

“தவெகவை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது”

தமிழ்நாட்டில் எந்த சக்தியாலும் தவெகவை வெல்ல முடியாது எனக் குறிப்பிட்ட செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார்; தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சமயம் வரும்போது விஜய் வாய் திறப்பார்: செங்கோட்டையன்

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. திருப்பூர், குப்பை நகராக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான உதவிகளை அரசு சரியான முறையில் செய்துதரவில்லை என குற்றஞ்சாட்டினார்.

விஜய் வாய் திறப்பதில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர்; அவர், சமயம் வரும்போது வாய்திறப்பார்; படைக்கு தலைமை வகிப்பவர், வெற்றிபெற்று நாட்டை ஆள்பவர்தான் தளபதி; விஜய்தான் உண்மையான தளபதி என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *