சென்னை, டிச.25; தமிழ்நாட்டிலிருந்து ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் சங்கம் என்ற அமைப்பு பக்தர்களை காசி, அயோத்தி மற்றும் வட இந்தியாவில் உள்ள பிற புனித தலங்களுக்கு அழைத்துச் சென்று வருகிறது.
அந்த அமைப்பின் மூலம் 6 நாள் ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள, 1,300 பக்தர்கள் நேற்று (24.12.2025) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
கொடியசைத்து தொடங்கி வைத்த பாஜக மூத்த தலைவர்கள்
இந்த ரெயிலின் பயணத்தை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தச் சிறப்பு ரெயில் முழுவதும் குளிர்சாதன (AC) வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்டது.
காசி, அயோத்தி, பிரயாக்ராஜ், கயா உள்ளிட்ட புனித நகரங்களுக்கு…
செல்லும் இடங்கள்: இந்த யாத்திரை பிரயாக்ராஜ், அயோத்தி, காசி மற்றும் கயா ஆகிய புனித தலங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பும்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, பிரதமர் நரேந்திர மோடியால் 500 ஆண்டு கால ராமர் கோவில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், காசி நகரம் தற்போது பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
