தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. “இங்கே அனைவரும் சமம்” என்ற வரியால் தொடங்கிய அவரது பேச்சு, ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், அவர்களுடைய கருத்துகளுக்கும், அதிக எண்ணிக்கை பெற்ற தவெக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், நல்ல கருத்துகள் ஏற்கப்பட்டு, தேவையற்றவை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், பேரவை ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் விஜயின் இந்த உரை, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவருக்கும் சம உரிமை மற்றும் மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகக் கருத்தை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இந்த உரை வேகமாக பரவி வருகிறது. “இங்கே அனைவரும் சமம்” என்ற வாசகம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
