த்திய இடைக்கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டுக்கான மொத்த தேர்ச்சி விகிதம் 85.20% ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.19 சதவீத புள்ளிகள் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை நடைபெற்ற தேர்வில் மாணவிகள் சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளனர். மாணவர்களை விட 6.73 சதவீத புள்ளிகள் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக CBSE தெரிவித்துள்ளது.
பிராந்திய வாரியான தேர்ச்சி விகிதங்களில், Trivandrum பகுதி 95.62% தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் Prayagraj பகுதி 72.43% தேர்ச்சியுடன் குறைந்த தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றன. அதன் பின்னர் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
https://cbseresults.nic.in/
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பள்ளி விவரங்களை பயன்படுத்தி இணையதளத்தில் முடிவுகளை சரிபார்க்கலாம். மேலும் மதிப்பெண் பட்டியல் மற்றும் டிஜிட்டல் சான்றிதழ்களையும் மாணவர்கள் விரைவில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.