தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வரும் Joseph Vijay அவர்களின் ‘நாகரிக சந்திப்பு’ அரசியல் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிய அரசியல் தலைவர்களை சந்திப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டாலும், அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களையும் சந்திக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதே நேரத்தில், பெரும்பான்மை பலம் இல்லாத சூழ்நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த அரசியல் பயணம் நடைபெறுகிறதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
முன்னாள் Dravida Munnetra Kazhagam அரசின் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், முந்தைய ஆட்சிக் கால அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜயின் ‘நாகரிக சந்திப்பு’ அரசியல், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை பலவீனப்படுத்தக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட துறைகளில் முறையான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
