புதியதாக Google கணக்குகளை தொடங்கும் பயனர்களுக்கு முக்கிய மாற்றம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மொபைல் எண்ணை இணைக்காத புதிய Google கணக்குகளுக்கு இனி 15GB இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படாது என்றும், அவர்களுக்கு 5GB ஸ்டோரேஜ் வரம்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது Google வழங்கும் 15GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேவை Gmail, Google Drive மற்றும் Google Photos உள்ளிட்ட சேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டு வரப்படலாம் என தகவல் தெரிவிக்கிறது.
மேலும், மொபைல் எண் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே முழுமையான இலவச சேவைகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் பழைய Google கணக்குகளுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் தொடர்பாக Google அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுமா என்பது தொழில்நுட்ப உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
