Skip to content

“விருப்பப்பட்டு சென்றால் குதிரை பேரம் இல்லை”: தவெக, அதிமுக விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தி விளக்கம்.

அதிமுக – தவெக விவகாரத்தில் பிரவீண் சக்கரவர்த்தி பதில்

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வது குறித்து எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருவர் சுய விருப்பத்துடன் வேறு கட்சிக்கு சென்றால், அதை குதிரை பேரம் என்று கூற முடியாது” என்று தெரிவித்தார்.


“அது அவர்களின் சொந்த விவகாரம்”

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்வது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரவீண் சக்கரவர்த்தி,

“அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்கிறார்கள் என்றால், அது அவர்களின் சொந்த விவகாரம். சுய விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவை குதிரை பேரம் என்று கூறுவது சரியல்ல” என்றார்.


“ஊழல், லஞ்சம் இல்லை என்று மக்கள் சொல்வார்கள்”

தமிழக அரசின் செயல்பாடு குறித்து பேசிய அவர்,

“முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல், லஞ்சம் இல்லை என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்” என்று கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கவில்லை. புகார்கள் வந்த இடங்களில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


“50 ஆண்டுகளை 50 நாட்களுடன் ஒப்பிடக் கூடாது”

அரசின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாக அவர்,

“50 ஆண்டுகள் ஆட்சியில் நடந்தவற்றை, 50 நாட்கள் ஆட்சியுடன் ஒப்பிட்டு தவறாக பேசக் கூடாது” என்று கூறினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை மதிப்பிட போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *