Skip to content

முதல்வர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.

முதல்வர் விஜய்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 தேர்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்டோர் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகளுடன் சேர்த்து, முதல்வர் விஜய்க்கு எதிரான மொத்தம் 4 தேர்தல் வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விசாரணைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *