Skip to content

நீலகிரியில் கனமழை எதிரொலி: கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மழையால் ஏற்படக்கூடிய சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறை பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் குறித்து தனியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருவதால், சாலைகளில் நீர் தேக்கம், மரங்கள் சாய்வு மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற சூழல்கள் உருவாகியுள்ளன. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *