Skip to content

இரட்டைமலை சீனிவாசனுக்கு லண்டனில் இருந்து மரியாதை செலுத்திய மு.க. ஸ்டாலின்.

“ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்தவர்” என புகழாரம் சூட்டிய திமுக தலைவர்

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சமூக நீதிப் போராளி திராவிட மணி இரட்டைமலை சீனிவாசனை நினைவுகூர்ந்து லண்டனில் இருந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்தவர் திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன். தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உலகிற்கு உணர்த்த, ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக துணிச்சலாக குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், “வட்டமேசை மாநாடு ஒலித்த லண்டனில் இருந்து அவருக்கு என் வணக்கத்தை செலுத்துகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலினின் இந்த பதிவு சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்த விவாதங்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *