ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் முக்கிய நியமனங்கள்.
தவெக செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் தொடர்பாக, தவெகவின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணி விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளை முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.
தலைமை நிலையச் செயலகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர் ரமேஷ், கேத்தரின் பாண்டியன், அனந்தஜித் மகியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
