வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன் சட்டமன்றத்தில் கவனம் ஈர்த்த திமுக உறுப்பினர்கள்
வேளாண் பட்ஜெட் சற்று நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அவர்களின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருப்பு சட்டையில் திமுக எம்எல்ஏக்கள்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு நிற சட்டை அணிந்து வந்தனர். இதன் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், சட்டப்பேரவை வளாகத்தில் இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
