“வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில்” திட்டத்தின் கீழ் புதிய செயலி அறிமுகம்
ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி உருவாக்குவதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார். “வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில்” என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு விவசாயிக்கும் நவீன தொழில்நுட்ப சேவைகளை எளிதாக வழங்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு டிஜிட்டல் சேவை
வேளாண் அமைச்சர் வினோத் கூறுகையில், ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி மூலம் விவசாயிகள் பயிர் ஆலோசனை, வானிலை தகவல், நோய் மேலாண்மை, உரப் பரிந்துரை, சந்தை விலை மற்றும் அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே தளத்தில் பெற முடியும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு துல்லியமான மற்றும் விரைவான தகவல்களை வழங்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
