புளுபெரி, அவகோடா, கிவி உள்ளிட்ட உயர்மதிப்பு பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
உயர் மதிப்பு பழங்கள் சாகுபடி திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார். புளுபெரி, அவகோடா, கிவி உள்ளிட்ட உயர்மதிப்பு கொண்ட பழங்களின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உயர்மதிப்பு தோட்டக்கலை பயிர்களுக்கு ஊக்கம்
வேளாண் அமைச்சர் வினோத் கூறுகையில், உயர் மதிப்பு பழங்கள் சாகுபடி திட்டம் மூலம் புளுபெரி, அவகோடா, கிவி உள்ளிட்ட சந்தை மதிப்பு அதிகம் கொண்ட பழங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் ஆதரவும் வழங்கப்படும்.
ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் உயர்மதிப்பு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகளையும் விவசாயிகளின் வருமானத்தையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
