Skip to content

“அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்” – சீமான்.

“சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் பேசியது ஆணவத்தின் உச்சம்” என விமர்சனம்

அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை வாசிப்பில் உள்ள தவறை சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளுமாறு எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கூறிய நிலையில், அதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த பதிலும், அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சமாக இருந்ததாக சீமான் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்

சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியதாக குற்றம்சாட்டிய சீமான், அதற்காக அமைச்சர் மரிய வில்சன் அதே சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை வாசிப்பில் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்ட பதில் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சீமானின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *