வார விடுமுறையையொட்டி குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்.
குற்றாலத்தில் களைகட்டும் சீசன் நிலவி வருகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருவதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்தின் இயற்கை அழகை ரசிப்பதுடன், அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதனால் குற்றாலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் தற்போது களைகட்டியுள்ளன.
