Skip to content

“உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” – டி.கே.சிவகுமார்

கர்நாடக வனத்துறை விவகாரத்தில் தமிழர்கள் உயிரிழப்பு

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

“மாநிலங்களுக்கு தங்களின் சொந்தப் பிரச்னைகள் உண்டு. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்; எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

“மற்றொரு மாநில நிர்வாகத்தில் தலையிடக் கூடாது”

எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், டி.கே.சிவகுமாரின் இந்தப் பேச்சு கவனம் பெற்றுள்ளது.

தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *