Skip to content

பரபரப்பு! அரசு பள்ளியில் ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் குடித்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு

வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் குடித்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலம்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்துள்ளனர். அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குடிநீர் குடித்த பிறகு உடல்நலக்குறைவு

குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த பின்னர் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீரில் ப்ளீச்சிங் பவுடர் அதிகளவில் கலந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *