Skip to content

“தோஷத்தை கழிக்க பிரார்த்தனை நடத்துங்கள்” – சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேச்சு

பாம்புக்கடி குறித்து அமைச்சர் 29 நிமிடங்களாக விளக்கம் அளிப்பதை சுட்டிக்காட்டி, பல தொகுதிகளில் “நாக தோஷம்” இருப்பதாக ஓபிஎஸ் கருத்து

“தோஷத்தை கழிக்க பிரார்த்தனை நடத்த வேண்டும்” என முன்னாள் முதலமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாம்புக்கடி தொடர்பாக அமைச்சர் நீண்ட நேரம் விளக்கம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், சுமார் 29 நிமிடங்களாக பாம்புக்கடி குறித்து அமைச்சர் விளக்கம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், இதன் மூலம் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் பாம்புக்கடி சம்பவங்கள் இருப்பது தெரியவருவதாக அவர் தெரிவித்தார். அந்த தொகுதிகளில் “நாக தோஷம்” இருப்பதாக தான் அறிந்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தோஷத்தை கழிக்க பிரார்த்தனை ஏதாவது இருந்தால், அதனை பேரவைத் தலைவர் நடத்திக் காட்ட வேண்டும்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

ஓபிஎஸின் இந்த கருத்து சட்டப்பேரவை கூட்டத்தில் கவனத்தை ஈர்த்தது. பாம்புக்கடி சம்பவங்கள் தொடர்பாக அரசு சார்பில் வழங்கப்படும் விளக்கங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *