Skip to content

“1 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் Volkswagen!” – கார் உற்பத்தி நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு

சர்வதேச போட்டி, மின்சார வாகனங்களுக்கான மந்தமான தேவை மற்றும் அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக Volkswagen நிறுவனம் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சுமார் 1 லட்சம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு.

Volkswagen நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மந்தமான தேவை மற்றும் அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகளவில் சுமார் 1 லட்சம் ஊழியர்களை குறைக்க Volkswagen நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audi, Porsche, Skoda, Lamborghini உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கார் பிராண்டுகளை கொண்ட முன்னணி வாகன உற்பத்தியாளராக Volkswagen திகழ்கிறது.

உலகளாவிய கார் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்த அளவில் இல்லாதது நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

இதனுடன் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளும் Volkswagen நிறுவனத்தின் செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், செலவுகளைக் குறைத்து நிறுவனத்தின் போட்டித்திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சுமார் 1 லட்சம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய Volkswagen திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை உலகளவில் Volkswagen நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *