இடதுசாரிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் 5வது ஆலோசனைக் கூட்டமாக இது நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைதம்பி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் நடைபெறும் இந்த இடதுசாரிகள் ஆலோசனைக் கூட்டம், இடதுசாரி கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஆலோசனையாக பார்க்கப்படுகிறது.
