சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, சாதிகளின் பட்டியலை இணைத்தே கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்புக்காக உருவாக்கப்படும் செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்கள் தங்களது சாதியைத் தேர்வு செய்யும் வகையில் நடைமுறையை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சாதிகளின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறையை பின்பற்றினால், சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிகளின் பெயர்களை பதிவு செய்யும் முறையில் ஏற்படும் குழப்பங்கள் கணக்கெடுப்பின் தரவுகளை பாதிக்கக்கூடும் என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை குறித்து விமர்சித்த அவர், “மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்துவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
