ஸ்கிரீன் டைம் தற்போது ஒரு வகையான போதையாக மாறிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திரையைப் பார்க்கும் பழக்கம் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நிலையில், அவர்களை மைதானங்களில் விளையாட ஊக்குவிப்பதன் மூலம் ஸ்கிரீன் டைமை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு குழந்தை மைதானத்தில் விளையாடத் தொடங்கினால், அந்த குழந்தையின் ஸ்கிரீன் டைம் இயல்பாகவே குறையும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் வாழ்க்கையோடு இணைய புத்தகங்களுக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்றும், அவர்களின் இயல்பான ஆர்வம் மற்றும் உயிர்ப்பை பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் அதிக நேரத்தை மொபைல் போன், கணினி மற்றும் பிற திரை சாதனங்களில் செலவிடும் நிலையில், அவர்களை வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடியின் கருத்து வலியுறுத்துகிறது.
குழந்தையின் இயல்பான துடிப்பும் உயிர்ப்பும் சிதையாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரின் கடமை என்றும் பிரதமர் மோடி தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.
