Skip to content

அசன் மவுளானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

அசன் மவுளானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான அசன் மவுளானா, 2021 தேர்தலில் போட்டியிட்டிருந்தார். தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாதது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது அவர் மீது தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அசன் மவுளானா அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தை தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *