அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் பறிமுதல்; போலீஸ் விசாரணை
காட்டாங்குளத்தூரில் கார் விபத்து ஏற்பட்டதில் இறையன்பு என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் கார் இந்த விபத்தில் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு காரில் வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றொரு காரில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது குடும்பத்தினர் வந்த கார் மோதியதில் இறையன்பு என்ற இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் தொடர்புடையதாக கூறப்படும், அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
